×

டாடி, மம்மி மருத்துவமனையில் ‘பொதுமக்களே பாதுகாப்பா இருங்க...’: வீட்டில் தனியாக இருக்கும் சகோதரிகள் உருக்கம்

விழுப்புரம்: டாடி, மம்மி மருத்துவமனையில் பணியாற்றுவதால் பொதுமக்களே பாதுகாப்பா இருங்க என வீட்டில் தனியாக இருக்கும் சகோதரிகள் உருக்கமாக பேசி உள்ளனர். விழுப்புரம் மாவட்டம் முகையூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர்கள் ஜோஸ் பிரேம் குமார். அவரது மனைவி வித்யாதேவி. மருத்துவர்களான இவர்கள் இருவரும் தொடர்ந்து கொரோனா நோய் தடுப்பு மருத்துவ சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் மகள்கள் ஜாப் ரியா ஆட்லின் பிரீட்டி, ஜோயல் நியோமி. இருவரும் விழுப்புரத்தில் உள்ள தனியார் பள்ளியில் இருவரும் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த குழந்தைகளின்  பெற்றோர்களான டாக்டர்கள் இருவரும் தொடர்ந்து மருத்துவமனையிலேயே பணியாற்றி வருவதால், வீட்டுக்கு வருவதில்லை.  இதனை அறிந்த இந்த குழந்தைகள் இருவரும் எங்களுடைய பெற்றோர் உங்களுக்காக மருத்துவமனையில் பணியாற்றி வருகின்றார்கள். எனவே நீங்கள் பாதுகாப்புடன் இருங்க, உங்கள் வீடுகளிலேயே இருங்கள் என்று சார்ட் பேப்பரில் எழுதிய வாசகங்களை பொதுமக்களுக்கு காண்பித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இச்சம்பவம் விழுப்புரம் நகரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Tags : Daddy ,Mummy Hospital ,public ,Sisters ,home ,civilians ,Mommy Hospital ,house , Daddy, Mommy ,Hospital, sisters , house alone, pathetically
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...