×

அமேசான் மழைக்காடுகளுக்குள் புகுந்த கொரோனா வைரஸ் : யானோமாமி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு தீவிர சிகிச்சை

வாஷிங்டன் :  அமேசான் மழைக்காட்டுக்குள் வசிக்கும் யானோமாமி பூர்வகுடி சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளான். பிரேசிலில் சுமார் 300 பூர்வகுடி சமூகங்களைச் சேர்ந்த எட்டு லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இந்நிலையில் வெளியுலக தொடர்பு ஏதுமில்லாமல் காட்டின் ஆழமான பகுதிகளில் இவர்கள்  வசித்து வருகின்றனர்.

கடந்த வாரம் கொகாமா என்ற பூர்வகுடி சமூகத்தை சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், தற்போது யானோமாமி என்ற சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுவனுக்கு தொற்று பரவியுள்ளதாக பிரேசில் வெளியுறவுத்துறை அமைச்சர் லூயிஸ் ஹென்ரிக் மேன்டெட்டா தெரிவித்துள்ளார். தற்போது அந்தச் சிறுவன் Roraima மாநிலத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அமேசான் பூர்வகுடிகளில் இதுவரை ஏழு பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 96 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 209 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 96,265 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,10,062 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,58,622 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும் 49,117 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags : Amazon rainforest ,Yanomami ,Old Boy for Intensive Care ,Yanomami Tribal Community , Amazon, rainforest, corona, virus, yanomami, tribe, boy, treatment
× RELATED அமேசான் காடுகளில் சட்டவிரோதமாகச்...