×

சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு : கடைக்கு சென்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் அரசு

சென்னை : சென்னை கே.கே.நகரில் மளிகைக்கடைக்காரர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மேலும் அந்த நபரின் கடைக்கு சென்றவர்களின் விவரங்கள் குறித்து அரசு சேகரித்து வருகின்றனர். அத்துடன் , கடைக்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்துமாறும், தானாக முன் வந்து சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா காரணமாக உலகமே பேரழிவின் விளிம்பில் இருக்கிறது.

கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. 21 நாட்கள் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு வரும் ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவடைகிறது. ஆனாலும் நோய் தொற்று கட்டுக்குள் வராததால் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வெளியே வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்காக அத்தியாவசிய கடைகளான மளிகைக்கடை, காய்கறி கடை, கறிக்கடை, பெட்ரோல் பங்கு ஆகியவை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளில் பொருட்கள் வாங்கும்போது சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், இதுவரை 834 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சென்னையில் மட்டும் 163 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள மாளிகைக்கடைக்காரருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியை சுற்றி வளைத்த போலீசார் அனைத்து வாடுகளையும் கண்காணித்து வருகின்றனர். மேலும் அந்த கடைக்கு இதுவரை சென்றவர்களின் விவரங்கள் குறித்து அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர்.

Tags : Govt ,KK Nagar ,Chennai ,Grocers , Chennai, KK Nagar, Grocery, Shopper, Corona, Impact
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!