×

ஊரடங்கு உத்தரவால் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு; படங்கள், சீரியல் பார்ப்பவர்கள் எண்ணிக்கை 97% உயர்வு

சென்னை: ஊரடங்கு உத்தவு காரணமாக தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 199 உயிரிழந்துள்ளனர். 6412 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கொரோனா பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 24ம் தேதி நள்ளிரவு முதல் வருகிற  ஏப்ரல்  மாதம் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

இதன் மூலம், நாடு முழுவதும் அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் நிறுவனங்கள் தவிர, ஏராளமான நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு கிடக்கின்றன. சுற்றுலா துறைகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டு கிடக்கின்றன.  இதனால் நாடு மக்கள் விட்டிலேயே முடங்கியுள்ளனர். இதற்கிடையே, விட்டில் முடங்கியுள்ள மக்களின் பொழுது போக்கிற்காக அதிகளவில் தொலைக்காட்சி மற்றும் ஸ்மார்ட்போன் உபயோகம் செய்கின்றனர். ஊரடங்கு உத்தரவில்  பொதுமக்களின் நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்த நீல்சன் நிறுவனம், தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், இந்தியாவில் மார்ச் 28-ம்தேதி அன்று தொடங்கிய வாரத்தில், தொலைக்காட்சி பார்ப்பது 43 % அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக தமிழகத்தில் இது 44 % அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூர்தர்ஷனில் ராமாயணம், மகாபாரம்  உள்ளிட்ட இதிகாச தொடர்கள் மீண்டும் ஓளிபரப்பு தொடங்கிய பின், இந்தியாவில் அதிகம் பேர் பார்க்கும் தொலைக்காட்சி சேனலாக, அது மாறியுள்ளது. மார்ச் 28ஆம் தேதி அன்று தொடங்கிய வாரத்தில் திரைப்படம் பார்ப்பது அதிகரித்துள்ளது.  திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்திய அளவில் 77 சதவீதமும், தமிழகத்தில் 89 சதவீதமும் அதிகரித்துள்ளது. அதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் செய்திகளை பார்ப்பது அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மிக முக்கியமான பழைய விளையாட்டு போட்டிகள் மறு ஒளிபரப்பு செய்யப்படுவதால், விளையாட்டு நிகழ்ச்சிகளை பார்ப்பது 21% அதிகரித்துள்ளது. பிரைம் டைம் அல்லாத நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பது 43 சதவீதமும், பிரைம் டைம்மில் 11  சதவீதமும் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவபர்களின் விகிதம் மார்ச் 21 அன்று தொடங்கிய வாரத்தில் 12.5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டின் சராசரி அளவு,  தினமும் 3.24 மணி நேரத்தில் இருந்து 3.48  மணி நேரமாக அதிகரித்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் மூலம் பணம் செலுத்துவது 4 % அதிகரித்து 77 சதவீதத்தை எட்டியுள்ளது. வீடியோ ஆன் டிமாண்ட் எனப்படும் இணையம் மூலம் தொடர்கள், படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 97 %  அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு  பயனாளி, இவற்றை பார்க்கும் நேரம் 12 % அதிகரித்து வாரத்திற்கு 3.59 மணி நேரத்தை எட்டியுள்ளது. ஸ்மார்ட் போன்களில், மூன்று அல்லது அதற்கும் அதிகமான விளையாட்டு செயலிகள் வைத்திருப்பவர்கள், இவற்றை பயன்படுத்துவது 40 %  அதிகரித்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : viewers , Increased curfew, television and smartphone usage; 97% increase in the number of viewers of images
× RELATED சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் எதற்கும்...