×

முடக்கத்தால் ஏற்பட்ட அவசரநிலையால் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு வாய்ப்பு: நிபுணர்கள் கருத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட 21 நாள் முடக்கநிலையால், அத்தியாவசியப் பொருட்களின் தேவை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்தது. இது பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு வாய்ப்பை ஏற்படுத்திவிட்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு 21 நாள் முடக்கநிலை அறிவித்தது. இதனால் மக்கள் பீதியடைந்து அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் மளிகைப் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர். இது குறித்து ஏபிஜே அப்துல்கலாம் தொண்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜன் பால் சிங் கூறியதாவது: மத்திய அரசு அறிவித்த முடக்கத்தால், அவசரநிலை போன்ற சூழல் ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் தேவை வழக்கத்துக்கு மாறாக அதிகரித்துள்ளது.

இது பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டது. கடந்தாண்டு நவம்பரில் டெல்லியில் காற்று மாசு அதிகரித்த போது, முககவசங்கள் விலை பல மடங்கு அதிகரித்த்து. தற்போது கொரோனா பாதிப்பு கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து பொருட்களும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகின்றன. இது இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் நடக்கிறது என்றார். ‘தி பிளாக் டைகர்’ என்ற பெயரில் ஊழல் பற்றி புத்தகம் எழுதி சிங் என்பவர் கூறுகையில், ‘‘கடைக்காரர்கள் மட்டும் பதுக்கவில்லை. குளிர்பதன கிடங்குகளிலும் இந்த பதுக்கல் நடக்கிறது.

மக்கள் பீதியடைந்து வீடுகளிலும், பொருட்களை வாங்கி பதுக்கி, சந்தையில் சப்ளைக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர். உணவுப் பொருட்கள் பதுக்கல் பற்றி அரசு அவ்வப்போது எச்சரிக்கை விடுகிறது. ஆனால் இதை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. கள்ளச்சந்தையில் பொருட்கள் பதுக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த குற்றத்தை கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது. இதை கண்டுபிடிக்க புது அணுகுமுறை தேவை’’ என்றார்.

Tags : counterfeit traders ,event ,Experts , Emergency, counterfeit traders, consultants
× RELATED உங்க 10 ஆண்டு ஆட்சியில் எல்லாமே போச்சு…...