×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜூன் மாத சுவாமி தரிசனத்துக்கு முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஜூன் மாதத்திற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டது. இதனால் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்து வந்தனர்.  இந்நிலையில்,  ஜூன் மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு கோட்டா நாளை வெளியாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக தற்காலிகமாக டிக்கெட் முன்பதிவு செய்வது நிறுத்தி வைக்கப்படுவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மேலும், மே 30ம் தேதி வரை  தரிசனம் மற்றும் அறைகள் முன்பதிவு செய்த பக்தர்கள்   டிக்கெட்டுகளை ரத்து செய்யும், அதற்கான பணத்தை மீண்டும் வழங்கவும் நடவடிக்ைக எடுக்கப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் 20ம் தேதி முதல் ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு சுவாமிக்கு நடைபெறும்  பூஜைகள் மட்டும் வழக்கம்போல் அர்ச்சகர்கள் மற்றும் சில அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Tirupati Ezumalayan Temple ,Swami Darshan , Tirupati Ezumalayan Temple, Reservation
× RELATED திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி...