×

கொரோனாவை கட்டுப்படுத்த ஓமியோபதியில் ‘ஆர்சானிக் ஆல்பம் 30 சி’ மருந்து பயன்படுத்தலாம்: தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம் பரிந்துரை

சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த ஓமியோபதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘ஆர்சானிக் ஆல்பம் 30 சி’ மருந்தை மக்களுக்கு வழங்க அரசு பரிந்துரை செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் ஞானசம்பந்தம் வேண்டுகோள் வைத்துள்ளார்.  சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் மருத்துவத்தில் வளர்ந்த நாடுகளும் வைரஸ்சை கட்டுப்படுத்த என்ன மருந்து பயன்படுத்துவது என்று தெரியாமல் திண்டாடி வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒரு நாளைக்கு பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி கொண்டு செல்கிறது. இதனால் உலக நாடுகள் விழி பிதுங்கி நின்று கொண்டிருக்கின்றனர்.  சீனாவில் முதலில் உருவான வைரஸ் இந்தியாவுக்கு எப்படி பரவும் என்று இருந்த நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 500 என்ற ரீதியில் நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது 5 ஆயிரத்தை கடந்து சென்றுவிட்டது.

பலி எண்ணிக்கைகளும் அதிகரித்து செல்கின்றன. இந்தநிலையில், மருத்துவ ஆராய்ச்சி துறைகள் எந்த சரியான மருந்துகளையும் பரிதுரை செய்யாததாலும், மருந்துகளை கண்டுபிடிக்காததாலும் மக்கள் என்ன செய்வதென்று அறியாமல், இன்னும் வரும் நாட்களில் என்னெண்ண நடக்குமோ, பரவலை எப்படி அரசு கட்டுப்படுத்தும், ஊரடங்கில் சமுக இடைவெளியில் இருந்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்று அரசு தெரிவித்துள்ளதால், அதனை மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.  ஆனால் எத்தனை நாட்களுக்கு மக்கள் இப்படி இருக்க முடியும். மருந்து இருந்தால் மட்டும் தானே கொரோனா தாக்குதலை முழுமையாக ஒழிக்க முடியும் என்ற நிலையில் உள்ளனர். இதற்காக சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் என்று சில மருந்துகளை சில மருத்துவர்கள் தெரிவித்து வருவதால், உயிர் பிழைத்துக்கொள்ள மக்கள் வாங்கி குடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் ஞானசம்பந்தம் கூறியதாவது: உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் தற்போது, கடுமையாக பாதித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் அறிகுறிகளை வைத்து பார்த்த ஆயுஷ் துறை, பிரதமருக்கு ஓமியோபதியில் ஆர்சானிக் ஆல்பம் (arsenicum album 30C) அரசு இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இந்த மருந்தை ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு என மூன்று வேலை 2 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு மாதம் கழித்து அறிகுறிகளின் நிலையை பொருத்து மருந்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கொரோனா அறிகுறிகள் என்று கூறப்படும் சளி, இரும்பல், நுரையீரல் பிரச்னைகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கும்.

குறிப்பாக மருத்துவத்தில், ஒரே மருத்துவ குறிகளை உள்ள மருந்துகளே ஒரு நோய்க்கு தீர்வாகும். எடுத்துகாட்டாக எப்படி பாம்பு கடிக்கு பாம்பு விஷம் பயன்படுத்தப்படுகிறதோ. அதே மாதிரிதான், இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம், கொரோனா கிருமி உள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது. நோய் தடுப்பு மற்றும் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும். இந்த மருந்தை எடுத்துக்கொள்வதன் மூலம் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. மற்ற மருந்துகளை போன்று ஓமியோபதி மருந்து ரத்ததில் கலப்பதில்லை. நரம்பு வழியாக செயல்பட கூடியது. ஓமியோபதி மருத்துவத்தை கண்டுபிடித்த ஜெர்மனி நாட்டை சேர்ந்த சாமூவேல் அனிமேன், ஒரு ஆங்கில மருத்துவர். ஆனால் அவர் ஓமியோபதியில் நோய் எதிர்ப்பு மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து, ஓமியோபதி மருத்துவத்தை உருவாக்கினார். குறிப்பாக ஓமியோபதி மருத்துவம் சமீபகாலமாக டெங்கு, பறவைகாய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு மருந்தை கண்டுபிடித்து அவற்றை ஒழிக்க உதவியாக இருந்தது. இதனை அரசுகளும் ஏற்றுகொண்டது.

எனவே தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கை, இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. முக்கியமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. எனவே, இதனை உடனடியாக கட்டுப்படுத்த, இந்த மருந்து குறித்து தமிழ்நாடு ஓமியோபதி மருத்துவ கவுன்சில் தலைவர் என்ற அடிப்படையில், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளேன். சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் என அனைவருக்கும் இந்த மருந்து குறித்து தெரிவித்துள்ளேன். ஆனால் இன்னும் எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. மத்திய அரசும் பரிந்துரையின்படி ஆய்வு செய்து வருகிறது.

எனவே, மத்திய, மாநில அரசுகள் இந்த மருந்திற்கு உடனடியாக அனுமதியளித்து. மக்களுக்கு வழங்க உத்தரவிட வேண்டும். இதன் விளையும் ரூ.40குள் அடங்கி விடும். எனவே வேகமாக பரவி வரும் இந்த கொரோனா வைரசை தடுக்க உடனடியாக செயல்பட்டால் தடுத்துவிட முடியும். கண்காணிப்பில் உள்ளவர்களுக்கும் இந்த மருந்தை கொடுத்து பரிசோதனை செய்துபார்க்க அனுமதிக்க வேண்டும். கேரளா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் இந்த மருத்துவம் ஏற்றுக்கொண்டு, மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை உள்ளவர்களும் மருத்துவரை அணுகி, இந்த மருந்துடன் சேர்த்து வேறு மருந்துகளையும் பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு டாக்டர் ஞானசம்பந்தம் கூறினார்.


Tags : Gnanasambandam ,President ,Tamil Nadu Omopathy Medical Council n ,Tamil Nadu Medical Council , Corona, Omopathy, Arsenic Album 30C, President of Tamil Nadu Omopathy Medical Council
× RELATED பள்ளிக்கரணை அரசு மேல்நிலைப்பள்ளியில்...