×

வேலையிழந்துள்ள 1 லட்சம் பேருக்கு உணவு ஹிரித்திக் ரோஷன் உதவி

சென்னை: கொரோனா தாக்கம் காரணமாக வேலையிழந்துள்ள ஏழைகள் 1 லட்சம் பேருக்கு உணவு வழங்குகிறார் நடிகர் ஹிரித்திக் ரோஷன். பிரபல இந்தி நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஆதரவற்ற மற்றும் வேலையிழந்துள்ள 1.2 லட்சம் பேருக்கு தொண்டு நிறுவனத்துடன் இணைந்து உணவு வழங்க முன்வந்துள்ளார். இது குறித்து ஹிரித்திக் ரோஷன் கூறும்போது, ‘நாட்டில் யாரும் பசியுடன் தூங்கக் கூடாது. அப்படி நடக்கிறதா என்பதை அறிய வேண்டும். களத்தில் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும் நீங்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். நம்மால் என்ன செய்ய முடியுமோ அதை தொடர்ந்து செய்வோம். ஒருவருடைய பங்களிப்புதான் முக்கியம். அது சிறியதோ பெரியதோ கிடையாது’ என்று கூறியுள்ளார்.

Tags : Food ,Hirthik Roshan , unemployed
× RELATED நிதிஷ், சந்திரபாபுநாயுடு வருவார்களா? தேஜஸ்வி யாதவ் பேட்டி