×

வள்ளியூரில் அம்மா உணவகம் அமைக்கப்படுமா?.. சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

வள்ளியூர்: ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றோரின் பசியை போக்குவதற்கு வள்ளியூரில் அம்மா உணவகம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெல்லை - நாகர்கோவில் இடையே வளர்ந்து வரும் நகரம் வள்ளியூர். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. தமிழகத்தில் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையில், சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு இடங்களில் அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் மட்டுமே அம்மா உணவகம் உள்ளதால் மற்ற இடங்களில் வசிக்கும் ஏழை, எளியோர் மற்றும் ஆதரவற்றோர் பசியால் வாடுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதேபோல் நெல்லை மாவட்டத்தில் நெல்லை - நாகர்கோவில் இடையே வளர்ந்து வரும் நகரான வள்ளியூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஏராளமான தொழிலாளர்கள், ஊரடங்கு உத்தரவு காரணமாக உணவுக்கு வழியின்றி தவித்து வருகின்றனர்.

சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவின்றி பசியால் வாடுகின்றனர். எனவே வள்ளியூரில் அம்மா உணவகம் திறந்து அனைவருக்கும் உணவு கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : restaurant ,Valliyur ,Amma , Valliyoor Amma Restaurant
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...