தேவகோட்டை அருகே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு காய்கறிகள்

தேவகோட்டை:  கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பொதுமக்கள் வருவாய் இன்றி சிரமப்பட்டு வருவதை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளர் செந்தில்நாதன், தனது செலவில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு காய்கறிகள் அடங்கிய பை வழங்கி வருகிறார். சுமார் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய பை கொடுக்கும் பணி நடந்து வருகின்றது.

தேவகோட்டை அருகே இளங்குடி கிராமத்தில் 200 ஏக்கரில் அமைந்துள்ள வாழை தோப்புகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மொத்தமாக வாழைக்காய்களை நேரடியாகச் சென்று விலைக்கு வாங்கினார். இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும் ஓரிரு தினங்களில் சிவகங்கை மாவட்டம் முழுவதும் உள்ள குடும்பங்கள் அனைவருக்கும் காய்கறிகள் கிடைத்து விடும் என செந்தில்நாதன் தெரிவித்தார்.

Related Stories:

>