×

108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒருமாத சிறப்பு ஊதியம்: டிடிவி தினகரன் கோரிக்கை

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எம்எல்ஏ டிவிட்டரில் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவத்துறை பணியாளர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கும் ஒருமாத சிறப்பு ஊதியம் அளித்திட வேண்டும். 5 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட இந்த அவசர ஊர்தி பணியாளர்களும் மக்களின் உயிரைக் காப்பாற்ற அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் தான் என்பதை அரசு மறுத்துவிடக்கூடாது. தற்போதைய நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.



Tags : ambulance workers ,DTV Dinakaran , 108 ambulance, one-time special pay,DTV Dinakaran demands
× RELATED விதிமீறலில் ஈடுபட்டதாக டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு