கொரோனா பாதிப்பு பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கை: கும்மிடிப்பூண்டி கி.வேணு கலெக்டரிடம் வலியுறுத்தல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட  செயலாளர் கும்மிடிப்பூண்டி கி.வேணு, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரை நேரில் சந்தித்து கொரோனா பரவலை தடுக்கவும், மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள பழங்குடி இன மக்கள், பதிவு செய்யாத அமைப்பு சாரா தொழிலார்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் விவசாயிகள், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவது. நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கிறுமி நாசினிகளை தொடர்ந்து தெளித்து பாதுகாப்பது குறித்து ஆலோசனை நடத்தின, கோரிக்கை மனு அளித்தார். அப்போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி கோபாலகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி  துணை தலைவரும், பூந்தமல்லி மேற்கு ஒன்றிய செயலாளருமான டி.தேசிங்கு, மாவட்ட அவைத் தலைவர் மு.பகலவன், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>