×

கொரோனா பாதிப்பு குறைந்தால் கேரளாவில் 3 கட்டங்களாக லாக்-டவுன் வாபஸ் பெற பரிந்துரை: நிபுணர் குழு அறிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்தால் 3 கட்டங்களாக லாக்-டவுனை வாபஸ் பெறலாம் என நிபுணர் குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கேரளாவில்   லாக்-டவுனை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுக்க முன்னாள் தலைமை செயலாளர்   ஆபிரகாம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இக்குழு அரசிடம் தாக்கல்   செய்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: கொரோனா பாதிப்பு   குறைந்தால் 3 கட்டங்களாக லாக்-டவுனை வாபஸ் பெறலாம். முதல் கட்டத்தில் ஒரு   வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இல்லாத மாவட்டங்களில்   நிபந்தனைகளை தளர்த்தலாம். ஒற்றை, இரட்டை இலக்க பதிவெண்  கொண்ட வாகனங்கள் ஒருநாள்  விட்டு ஒருநாள் வெளியே செல்லலாம்.  ஞாயிற்றுக்கிழமைகளில் வாகனங்களை  அனுமதிக்க கூடாது.

வழிபாட்டு தலங்களை  திறக்கக்கூடாது.  திருமணம் உட்பட சுபநிகழ்ச்சிகளில் 10 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம். 2வது  கட்டத்தில் ஆட்டோ, டாக்ஸிகளை  கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கலாம். குறைந்த  தூர பஸ்களை இயக்கலாம். 3ம் கட்டத்தில், அனுமதிக்கப்பட்ட  அளவில் மூன்றில் 2  பங்கு பயணிகளுடன் மாவட்டங்களுக்கு இடையே பஸ்களை இயக்கலாம். 50  சதவீத  பயணிகளுடன் விமானங்களை இயக்கலாம். ஆனால் கட்டுப்பாடுகள் முழுமையாக விலகும்   வரை வெளிநாட்டு விமானங்களை இயக்கக்கூடாது. பள்ளி, பல்கலை தேர்வுகளை   நிபந்தனைகளுடன் நடத்தலாம். இவ்வாறு அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை  மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பரிசோதனையில் முதலிடம்:  தினமும் கொரோனா  பரிசோதனை நடத்தப்படுபவர்களின் எண்ணிக்கையில் கேரளா முதலிடத்தில் உள்ளது.  3.30 கோடி மக்கள் தொகையுள்ள கேரளாவில் இதுவரை 1.07 லட்சம் பேருக்குமேல்  பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால் 7.30 கோடி மக்கள் தொகையுள்ள மத்தியப்  பிரதேசத்தில் சுமார் 3,500 பேருக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.  இதுபோல 11.20 கோடி மக்கள் தொகையுள்ள மகாராஷ்டிராவில் 20 ஆயிரத்துக்கும்  குறைவானவர்களுக்கு மட்டுமே ெகாரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டிரோனை பார்த்து அலறி ஓடும் மக்கள்: கேரளாவில் பொது இடங்களில் மக்கள் கூடுகிறார்களா என்பதை கண்காணிக்க போலீசார் டிரோனை பயன்படுத்தி வருகின்றனர்.

டிரோன் பதிவு செய்யும் காட்சிகளை போலீசார் தங்கள் பேஸ்புக் பக்கத்தில் கிரிக்கெட் வர்ணனையை பின்னணியாக ேசர்த்து பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது. டிரோன் பறப்பதை பார்த்து மக்கள் அலறி அடித்து ஓடுவதும், தலையில் துணியை போட்டு மறைப்பதும் நகைச்சுவையாக இதில் காட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோ போலீசார் வெளியிட்ட சில மணி நேரங்களில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இது வைரலாகி வருகிறது.

எம்எல்ஏ வீட்டு  வளாகத்தில் பூனைத்தலை
திருச்சூர் தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் அனில் அக்கரெ. இவர் புறநாட்டுக்கரையில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பின்புறம் பசு தொழுவம் உள்ளது. நேற்று அதிகாலை 6 மணியளவில் அங்கிருந்த  தண்ணீர் வைக்கும் பாத்திரத்தில் ஒரு பூனையின் தலை கிடந்தது. அப்போது பக்கத்து வீட்டு ெபண், அவரிடம், அதிகாலை 5.30 மணியளவில் அமைச்சர் வீட்டின் பின்புறம் வெள்ளை உடையணிந்த உயரமான ஒரு உருவம் நின்று கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். இதனால் அனில் அக்கரேவிற்கு சந்தேகம் ஏற்பட்டு, போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அங்கு வந்து பூனை தலையை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மர்மநபரையும் போலீசார் தேடி வருகினறனர்.

Tags : lock-down withdrawal ,Kerala , Corona, Kerala, Lock-down withdrawal
× RELATED மசோதாக்களில் கையெழுத்து போடவில்லை...