×

ஊரடங்கால் வருவாய் பாதிக்கப்பட்டுள்ள வக்கீல்களுக்கு நிவாரணம் வழங்க 2.5 லட்சம்: உயர் நீதிமன்ற நீதிபதி வழங்கினார்

சென்னை: கொரோனா வைரசை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் உள்பட தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டன. முக்கிய வழக்குகள் மட்டும் வீடியோ கான்பரன்ஸ், ஜூம் ஆப் வலைத்தளம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் விசாரிக்கப்பட்டு வருகிறது.இந்த ஊரடங்கு காலத்தில் இளம் வக்கீல்கள் எந்த வருவாயும் இல்லாமல் சிரமப்படுவதாகவும் அவர்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்றும் தமிழ்நாடு பார்கவுன்சிலுக்கு வக்கீல்கள் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடர்பாக, நடந்த தமிழ்நாடு பார்கவுன்சில் கூட்ட முடிவின்படி ஒரு நிதி உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கு பார்கவுன்சில் நிர்வாகிகள், உறுப்பினர்கள், மூத்த வக்கீல்கள் நிதி அளித்து வருகிறார்கள். மூத்த வக்கீல் விடுதலை 1 லட்சமும், மூத்த வக்கீலும் எம்பியுமான பி.வில்சன் 1.5 லட்சமும் வழங்கியுள்ளனர். இந்நிலையில், வக்கீல்கள் நிவாரணத்திற்காக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் ரூ.2.5 லட்சத்தை பார்கவுன்சிலுக்கு வழங்கியுள்ளார். கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அமைப்புசாரா தொழிலாளர்களின் நிவாரணத்திற்காக முதன்முதலில் தனது ஒரு மாத சம்பளத்தை நிதியாக அளித்து மற்றவர்களும் நிதி உதவி செய்ய முன்னுதாரணமாக இருந்தவரும் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : judge ,Rs ,High Court ,lawyers , Curfew, Revenue, Lawyers, High Court Judge
× RELATED பட்டா விஷயத்தில் நீதிமன்ற அவமதிப்பு...