×

சேமிப்பு கணக்கு வட்டியை மீண்டும் குறைத்தது எஸ்பிஐ

புதுடெல்லி: சேமிப்பு கணக்கில் உள்ள டெபாசிட்களுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மீண்டும் குறைத்துள்ளது.  ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வட்டியை 0.75 சதவீத வட்டியை குறைத்ததை அடுத்து, பாரத ஸ்டேட் வங்கி ரெப்போ அடிப்படையிலான கடன்களுக்கும் அதே அளவு வட்டியை குறைத்தது. தற்போது, எம்சிஎல்ஆர் அடிப்படையிலான கடன்களுக்கு வட்டியை 7.75 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக குறைத்துள்ளது. இது நாளை அமலுக்கு வருகிறது. இதுபோல்,  சேமிப்பு கணக்கில் உள்ள டெபாசிட் தொகைக்கான வட்டியை கடந்த மாதம் 11ம் தேதி  3 சதவீதமாக இந்த வங்கி குறைத்திருந்தது. தற்போது மேலும் 0.25  சதவீதம் குறைத்து 2.75 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

Tags : SBI , Savings Account Interest, Reduced, SBI
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...