×

தமிழகம் முழுவதும் 14 டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம்: டிஜிபி திரிபாதி உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 14 டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக காவல் துறை டிஜிபி திரிபாதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:சென்னை மத்திய குற்றப்பிரிவில் இருந்து உதவி கமிஷனர் அசோகன் சென்னை எண்ணூர் உதவி கமிஷனராகவும், சென்னை பாதுகாப்பு பிரிவில் இருந்த அரிக்குமார் சென்னை எம்.ேக.பி.நகர் உதவி கமிஷனராகவும், சென்னை எம்.ேக.பி.நகரில் இருந்த முத்துகுமார் புழல் உதவி கமிஷனராகவும், திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாக இருந்த தனரசு திருப்பூர் காங்கேயன் டிஎஸ்பியாகவும், ெசன்னை-II சிபிசிஐடி, ஓசியூவில் டிஎஸ்பியாக இருந்த ஜீவானந்தம் சென்னை பரங்கிமலை உதவி கமிஷனராகவும்,

சென்னை பரங்கிமலை உதவி கமிஷனராக இருந்த சங்கரநாராயணன் சென்னை மாநில குற்ற ஆவண காப்பக டிஎஸ்பியாகவும், சென்னை பூக்கடை உதவி கமிஷனராக இருந்த லட்சுமணன் ெசன்னை நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், சென்னை மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாக இருந்த பாலகிருஷ்ண பிரபு ெசன்னை பூக்கடை உதவி கமிஷனராகவும், சென்னை, தமிழக கமாண்டோ படை டிஎஸ்பியாக இருந்த சுந்தரேசன் மாநில மனித உரிமை ஆணைய டிஎஸ்பியாகவும், விழுப்புரம் மாவட்ட நில அபகரிப்பு சிறப்பு பிரிவு டிஎஸ்பியாக இருந்த விஜயராமன் சென்னை,

தமிழக கமாண்டோ பிரிவு டிஎஸ்பியாகவும், கோவை மண்டல பயிற்சி மைய டிஎஸ்பியாக இருந்த நாகராஜன் சேலம் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராகவும், சேலம் சட்டம் ஒழுங்கு உதவி கமிஷனராக இருந்த செல்வராஜ் சேலம் சி.சி.ஐ.டபிள்யூ சிஐடி டிஎஸ்பியாகவும், சென்னை சீருடைப்பணியாளர் தேர்வு குழும டிஎஸ்பியாக இருந்த ஜெரினா பேகம் சென்னை பெண் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு டிஎஸ்பியாகவும், சென்னை சிபிசிஐடி ஓசியு டிஎஸ்பியாக இருந்த சிவனுபாண்டியன் தமிழக சீருடைப்பணியாளர் தேர்வு குழும டிஎஸ்பியாகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : TSPs ,DGP Tripathi ,Tamil Nadu , amil Nadu, 14 DSP, Workplace Transfer, DGP Tripathi
× RELATED சாத்தான்குளம் காவல் துணை...