×

அம்மா உணவகத்தில் இலவச முட்டை

மதுரை: மதுரை அம்மா உணவகத்தில் அசைவ பிரியர்களுக்காக உணவுடன் இலவசமாக முட்டை வழங்கப்படுகிறது. மதுரையில் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகங்கள் மூலம், தூய்மை பணியில் ஈடுபட்டு வரும் 3 ஆயிரம் பணியாளர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அம்மா உணவகங்களில் கலவை சாதங்கள் வழங்கப்படுகின்றன. தற்போது மதுரை மாநகராட்சி கமிஷனர் விசாகன்  ஏற்பாட்டில் அசைவ பிரியர்களுக்காக முட்டை வழங்கப்பட்டு வருகிறது. நன்கொடையாளர்களால் வழங்கப்படும் முட்டைகள் இலவசமாக கொடுக்கப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Mom's Restaurant ,amma hotel , Free Egg . amma hotel
× RELATED கோயம்பேடு மார்க்கெட் அருகே அம்மா...