×

கொரோனா தொற்று உறுதியான பெண் பிரசவித்த குழந்தையின் ரத்த மாதிரி ஆய்வுக்கு அனுப்பி வைப்பு

தஞ்சை: தஞ்சையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் குழந்தையின் ரத்த மாதிரி மற்றும் உமிழ்நீர் நேற்று கொரோனா ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை சுந்தரம்நகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவர், தஞ்சை ராஜாமிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரது மாமனார் டெல்லி நிகழ்ச்சிக்கு சென்று வந்த நிலையில் மருமகளான இவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அப்பெண்ணுக்கு இரண்டாவது பிரசவமாக ஆண் குழந்தை நேற்றுமுன்தினம் பிறந்தது.

இதையடுத்து அவரை தஞ்சை ராஜாமிராசுதார் அரசு மருத்துவமனை மகப்பேறு பிரிவில் தனி வார்டில் தனிமைப்படுத்தப்படுத்தி மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும் சிசேரியன் மூலம் பிறந்த ஆண்குழந்தை தனி வார்டில் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அக்குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பதற்கு வாய்ப்புள்ளதா? என்பதை அறிய அதன் ரத்த மாதிரி உள்ளிட்டவை பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று மருத்துவர்கள் அனுப்பியுள்ளனர்.


Tags : Corona, female childbirth, baby
× RELATED அனல் மின் நிலைய தேவைக்காக ஒடிசாவில்...