×

நோய் தொற்று இல்லை என்று கூறி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட டெல்லி வாலிபருக்கு கொரோனா உறுதி: மாயமானவரை விழுப்புரம் முழுவதும் தேடுகிறது போலீஸ்

விழுப்புரம்: கொரோனா இல்லை என்று கூறி விழுப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவர்களால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட டெல்லி வாலிபருக்கு  கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மாயமான அவரை போலீசார் தேடுகின்றனர்.  டெல்லி பட்டேல் நகரை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர் கடந்த டிசம்பர் 10ம் தேதி புதுச்சேரியில் நடந்த நேர்முக தேர்வுக்கு வந்துள்ளார். பின்னர் சாலை விபத்தை ஏற்படுத்தியதாக புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு கடந்த 16ம் தேதி விடுவிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் 21ம் தேதி விழுப்புரம் வந்து டெல்லி செல்லும் லாரி டிரைவர்கள் இருவருடன் தங்கியிருந்துள்ளார்.  அவர் கடந்த 6ம் தேதி  விழுப்புரம் கொரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே கொரோனா தொற்று இல்லை என நேற்று முன் தினம் இரவு 26 பேரை டாக்டர்கள் டிஸ்சார்ஜ் செய்தனர். ஆனால், நள்ளிரவில்  அந்த 26 பேரில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை பிடித்து வரும்படியும் போலீசாரை சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டது. அதன்படி விழுப்புரம் போலீசார் விடுவிக்கப்பட்ட 4 பேரில் விழுப்புரத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் மீண்டும் சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர். ஆனால் டெல்லியில் இருந்து வந்த வாலிபர் மாயமாகிவிட்டார். உள்ளூர் முகவரி எதுவும் இல்லாததால் அவர் எங்கே சென்றார் என்பது தெரியவில்லை. அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.


Tags : Coroner ,illusionist Coroner ,Delhi ,teenager , Delhi Volunteer, Corona, Villupuram
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...