×

இந்திய பங்குச்சந்தையில் ஒருநாள் ஏற்றத்துக்குப்பின் மீண்டும் சரிவு: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 29,894 புள்ளிகளில் வர்த்தகம்

மும்பை: இந்திய பங்குச்சந்தையில் ஒருநாள் ஏற்றத்துக்குப்பின்  மீண்டும் சரிவடைந்து உள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 173 புள்ளிகள் குறைந்து 29,894 புள்ளிகளில் வர்த்தகமானது. இன்றைய தொடக்க நேர வர்த்தகத்தில் 1,161 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ் பிற்பகலில் சரிவை சந்தித்தது.

கொரோனா வைரஸ் பாதிப்பு துவங்கிய கால கட்டத்தில் இருந்தே சர்வதேச பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதன்  எதிரொலியாக, 2-வது வாரமாக இந்திய பங்குச்சந்தை தொடர்ந்து சரிந்து வருகிறது. வாரத்தின் முதல் நாளான நேற்று வணிகம்  தொடங்கிய உடனேயே பங்குச் சந்தையின் புள்ளிகள் மளமளவென குறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் நேற்று ஒருநாள் ஏற்றத்தை சந்தித்த இந்திய பங்குச்சந்தைகள் தற்போது மீண்டும் சரிவடைந்து உள்ளது.

உலகநாடுகளை அச்சத்தில் தவிக்க விடும் கொரோனா தொற்று, தற்போது இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் தாக்கத்தால் பங்குச்சந்தைகள் கடுமையாக சரிந்துள்ளது. இன்று மாலை வர்த்தகம்  மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 173 புள்ளிகள் குறைந்து 29,894 புள்ளிகளில் முடிவடைந்தது.

Tags : Mumbai ,Bombay Stock Exchange ,Sensex , Bombay Stock Exchange, Mumbai: 29,894 points
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...