×

கொரோனா மனித குல வரலாற்றுக்கே அச்சுறுத்தல்; ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே இப்போது அரசின் முன்னுரிமைப் பணி : பிரதமர் மோடி உருக்கம்

டெல்லி : ஊரடங்கை மேலும் நீட்டிக்க வேண்டுமென்று அனைத்து மாநில அரசும் கோரிக்கை விடுத்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.இந்தியாவில் வேகமாக கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், நாட்டில் உள்ள அனைத்து கட்சி உறுப்பினர்களுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அனைத்துக்கட்சி கூட்டம் என்ற வகையில் அமைந்த இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி பேசிய விஷயங்கள் குறித்து பிரதமர் அலுவலகம் தற்போது செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ஒவ்வொரு உயிரையும் காப்பது தான் அரசாங்கத்தின் மிக முக்கியமான பணியாக வைத்திருக்கிறோம் என்றும் நேர்மறையாக அரசியலை கொண்டு நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொரோனாவை சமாளிக்க வேண்டும் என்றும்  பேசியிருக்கிறார்.

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடனான ஆலோசனையின் போது மோடி பேசியவை.

*மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் ஊரடங்கை நீட்டிக்குமாறு பரிந்துரைத்தன.கொரோனா பரவுவதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என நிபுணர்களும் பரிந்துரைத்தனர்.

*கொரோனாவால் நாட்டில் சமுதாய அவசரநிலை போன்ற சூழல் நிலவுகிறது.கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரவலுக்கு எதிராக தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டி உள்ளது.

*ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதே இப்போது அரசின் முன்னுரிமைப் பணியாகும்.

*கொரோனா மனித குல வரலாற்றுக்கே அச்சுறுத்தலாக உள்ள நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது.

*கொரோனாவுக்கு எதிராக மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மாநில அரசுகள் சிறப்பாக பணியாற்றி வருகின்றன

*நாடு தற்போதுள்ள நிலையில் கடினமான முடிவுகளை எடுத்து மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியுள்ளது.

*கொரோனா பாதிப்பால் இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற அரசு உறுதி பூண்டுள்ளது.

Tags : Modi ,Corona ,government , Curfew, Orders, Central Government, Tamil Nadu Government, Prime Minister Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...