×

சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சியில் ஊர் எல்லையில் கம்பி வேலி அமைத்து தடுப்பு

சீர்காழி: சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சியில் பொதுமக்கள் சார்பில் ஊர் எல்லையில் கம்பி வேலி வைத்து தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.டெல்லி சென்றுவிட்டு வீடு திரும்பிய நாகை மாவட்டம் சீர்காழி நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் சீர்காழி நகர்ப் பகுதி முழுவதும் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் சீல் வைக்கப்பட்டுள்ளது.

சீர்காழி அருகே மருதங்குடி ஊராட்சியில் சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் ஊர் எல்லையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பொதுமக்கள் கம்பி வேலி அமைத்து தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர். அவசர தேவைகளுக்கு மட்டும் செல்பவர்களை மட்டும் அனுப்பி வருகின்றனர். வெளிநபர்கள் கிராமத்திற்கு வருவதற்கு தடை என எழுதி வைத்துள்ளனர்.

Tags : town ,Sirkazhi ,Maruthangudi ,fence , Construction ,fence ,Maruthangudi ,Sirkazhi
× RELATED மயிலாடும்பாறை அருகே பாதியில்...