×

கொரோனா பிடியில் அமெரிக்கா: பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது...பாதிப்பு காரணமாக 12,857 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை 4,00,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 209 நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்திவருகிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா வைரசின் தாக்கம் எப்போது தணியும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.

உலக அளவில் 14 லட்சத்து 34,235 பேருக்கு கொரோனா தொற்று பாதித்துள்ளது உறுதியானது. இந்நோய்க்கு இது வரை 82,143 பேர் பலியாகியுள்ளனர்.இத்தாலியில் 1 லட்சத்து 35,586 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் 17,129 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மேலும் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்கா திணறி வருகிறது. அந்த நாட்டில் மொத்தமாக கொரோனாவால் 4,00,549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பால் 12,857 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 21,711 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

போர் பலியை மிஞ்சிய கொரோனா

1775 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா எதிர்கொண்ட ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட இந்த வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகம். அமெரிக்க புரட்சி, 1812 ஆம் ஆண்டுப் போர், இந்தியப் போர்கள், மெக்ஸிகோ போர், ஸ்பானிய - அமெரிக்கப் போர் மற்றும் வளைகுடாப் போர் ஆகிய ஆறு போர்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 961. ஆனால் கொரோனா இதுவரை 12 ஆயிரத்து 857 பேரை பலி கொண்டிருக்கிறது.

Tags : Corona Grips America ,Victims ,US , Corona, USA, casualties
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...