×

மன்னார்குடி அருகே மூச்சு திணறலுக்கு சிகிச்சைக்கு சென்ற விவசாய தொழிலாளி பரிதாப சாவு: பரிசோதனைக்காக உடலை கொரோனா தடுப்பு மருத்துவக்குழு எடுத்து சென்றது

மன்னார்குடி: மன்னார்குடி அருகே மூச்சுத்திணறலுக்கு சிகிச்சைக்கு சென்ற விவசாய தொழிலாளி செல்லும் வழியிலேயே இறந்தார். பரிசோதனைக்கு உடலை கொரோனா தடுப்பு மருத்துவக்குழு எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் பரவாக்கோட்டை அருகே ஆலங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விவசாய கூலித்தொழிலாளியான ஆறுமுகத்திற்கு, மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் அவரது சிறுநீரகம் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை ஆறுமுகத்திற்கு கடும் மூச்சு திணறல் ஏற்படவே அவரை அவரது உறவினர்கள் மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு மூச்சு திணறல் அதிகளவில் இருந்தது தெரிய வந்தது. இதனால் அவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பது குறித்த பரிசோதனை மேற்கொள்ள திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் இறந்து விட்டார். இதனால் அவரின் உடல் ஆலங்கோட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்த தகவல் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மூலம் திருவாரூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து திருவாரூரில் இருந்து வேறொரு ஆம்புலன்சில் கொரோனா வைரஸ் தடுப்பு மருத்துவக்குழுவினர் ஆலங்கோட்டை கிராமத்திற்கு வந்தனர். அங்கிருந்த உறவினர்களிடம் ஆறுமுகத்தின் உடலை முழுமையாக பரிசோதித்த பின்னரே ஒப்படைப்போம் எனக்கூறி அவரின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.


Tags : paramedic death ,Mannargudi ,examination ,Corona Prevention Medical Team ,death ,farm , Farmer's death,farm , Mannargudi
× RELATED ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த...