×

முக்கியமான கட்டத்தில் இருப்பதால் சென்னையில் கொரோனா தொற்றுள்ள 43 இடங்களை சுற்றி பாதுகாப்பு வளையம்

* குறிப்பிட்ட பகுதி வரை மட்டுமே மக்கள் வர முடியும்
* மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டி

சென்னை: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள 43 இடங்களைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னை திருவெற்றியூரில் நடைபெற்றுவரும் கொரோனா ஆய்வு பணியை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று நேரில் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் அளித்த பேட்டி:  சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம். பல்வேறு நிலையில் உள்ள 16 ஆயிரம் பேர் அனைத்து வார்டுகளிலும் இந்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடுகள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை அடிப்படையில் 15,000 பகுதிகளாக மாநகரம் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு நபர் என்கிற அடிப்படையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. எல்லா வீடுகளிலும் தினமும் கண்காணிப்பு பணி நடைபெற்றுவருகிறது. ஏதாவது அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் உடனடியாக  மருத்துவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுவார்கள்.  ஏதவது ஒரு பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யும் பட்சத்தில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும். சென்னையில் இதுவரை 43 இடங்களில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18 லட்சம் குடும்பங்கள் சென்னை மாநகராட்சியில் உள்ளனர்.

அறிகுறிகளின் அடிப்படையில் கணக்கெடுப்பின் படி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள். பாதுகாப்பு வளையத்துக்குள் உள்ள மக்கள் பாதுகாப்பு பகுதி எல்லை வரை மட்டுமே வரமுடியும்.  பாதுகாப்புக்காக தான் கொரோனா உறுதி செய்யப்பட்ட  பகுதிகள் அடைக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதி அடைய தேவை இல்லை. இது வழக்கமான மருத்துவ நடைமுறை. சென்னையில் 110  கரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கையில் ராயபுரம் முதலிடத்தில் உள்ளது. கோடம்பாக்கம் மருத்துவர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதன் அடிப்படையில் தகவல்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகிறது. இதே போல் டெல்லி மாநாடு சென்றவர்களுடைய தகவல்கள் தனித்தனியாக திரட்டப்பட்டு வருகிறது.

பீனிக்ஸ் மால் பணியாற்றி யாருக்கும் இதுவரை அறிகுறி கண்டறியப்படவில்லை. இதுவரை 1 லட்சம் பேர் கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்வார்கள் என்று எதிர்பார்த்தோம். எனவே அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்வீட்டு  தனிமையில் உள்ளவர்களில் 13,000 பேரின் தனிமைப்படுத்திய காலம் நிறைவு பெற்றுள்ளது. லயோலா கல்லூரி உதவியுடன் வெளிநாடு சென்று வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கபட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : places ,Chennai ,security ring , Prakash, Corporation Commissioner, Madras, Corona
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்