×

திருச்சியில் 104 டிகிரி வெயில்: வெப்ப சலனத்தால் மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக திருச்சியில் நேற்று 104 டிகிரி வெயில் பதிவானது.  வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக நிலவி வந்த வெயில் மெல்ல மெல்ல அதிகரித்து தற்போது சராசரியாக 100 முதல் 102 டிகிரியை தொட்டுள்ளது. நேற்று ெவப்ப சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. குறிப்பாக தேன்கனிக்கோட்டையில் 30 மிமீ மழை பதிவாகியுள்ளது. ஓசூர், குன்னூர், உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் 20 மிமீ மழை பெய்துள்ளது.  

இதனால் அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து சற்று குளிர்ச்சி நிலவுகிறது. இருப்பினும், அதிகரித்து வரும் வெப்பம் காரணமாக, அதிகபட்சமாக நேற்று திருச்சியில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது. கரூர், திருத்தணி, வேலூர் 102, தர்மபுரி, மதுரை, தஞ்சாவூர் 100, கோவை 99, சென்னை 97 டிகிரி வெயில் நிலவியது.  இந்நிலையில், மேலும் 2 நாட்களுக்கு வெப்ப சலனம் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கோவை, ஈரோடு, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும்.  இதுதவிர, தென் மேற்கு திசையில் இருந்து கடற்காற்று வட கிழக்கு திசை நோக்கி வீசுவதால், இன்று தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags : Trichy Trichy , Trichy, 104 degrees sun, rain
× RELATED திருச்சியில் வீட்டில் பட்டாசு பதுக்கியவர் கைது