×

என்ன ஆச்சு இந்த பயபுள்ளைகளுக்கு... குழப்பத்தில் தெரு நாய்கள்

விலங்குகளின் நடத்தை பற்றி அறிந்த நிபுணர்கள், `நாடு முழுவதுமான ஊரடங்கினால் மக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இதனால், தெரு நாய்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உணவு கிடைக்கும் போது அவை ஒன்றை ஒன்று தாக்கி கொள்கின்றன. தெரு நாய்களை பொருத்தமட்டில் கிடைப்பதை சாப்பிடும் பழக்கம் உடையவை. வேட்டையாடுபவை அல்ல. மார்க்கெட் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் சுற்றி திரியும்  நாய்கள், எப்போதும் மனிதர்களுடன் தொடர்பு உடையவையாக இருக்கும். யாராவது ஒருவர்  மூலம் உணவு கிடைத்து விடும். தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் சாலைகளில் மனிதர்களின் நடமாட்டத்தை காண முடியாததால் குழம்பி போய் உள்ளன.

இது அவற்றின் மனநிலையில், நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சில நாய்கள் அந்த ஏரியாவையே காலி செய்து விட்டு வேறு பகுதிகளுக்கு சென்று விடுகின்றன. மனிதாபிமான அடிப்படையில் பலர் உணவளிப்பதால் அவற்றின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், தற்போது உணவும் கிடைக்காமல், மனிதர்களையும் பார்க்காமல் அவை வெறுப்பில் சுற்றித் திரிகின்றன,’ என்று தெரிவித்துள்ளனர்.


Tags : Street dogs, corona virus
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...