×

இறக்குமதி மூலம் ஜிஎஸ்டி வசூல் மிக குறைவு

புதுடெல்லி: கடந்த மாதத்தில் இறக்குமதி மூலம் ஜிஎஸ்டி 18,000 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதில் இருந்து இதுவே குறைந்த பட்ச அளவாகும்.  ஜிஎஸ்டி அமலுக்கு வந்தபோது, இறக்குமதி மூலம் கிடைக்கும் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி கடந்த 2017 ஜூலையில் 20,926 வசூல் ஆகியிருந்தது. இதன்பிறகு 2018 பிப்ரவரியில் 19,603 வசூல் ஆனது.  அதே ஆண்டு அக்டோபர் மாதத்தில் அதிகபட்ச அளவாக 26,908 கோடி வசூலானது.  இதன்பிறகு தொடர்ந்து ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வசூல் சரிவையே சந்தித்து வந்துள்ளது. இந்நிலையில், கடந்த மார்ச் மாதத்தில் ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி இறக்குமதி மூலம் 18,056 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2018 பிப்ரவரி மாதத்துக்கு பிறகு இதுவே குறைந்த பட்ச வசூல் அளவாக கருதப்படுகிறது.

 கொரோனா வைரஸ் காரணமாக சீனாவில் உற்பத்தி முடங்கியது. இதனால், அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து மூலப்பொருட்கள், பிளாஸ்டிக், மொபைல் உற்பத்திக்கு தேவையான எலக்டரானிக் உதிரிபாகங்கள் இறக்குமதி கடுமையாக சரிந்து விட்டது. இதுவே, கடந்த மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் சரிவுக்கு முக்கியமான காரணமாக கருதப்படுகிறது என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : GST
× RELATED வரலாற்றில் முதன்முறையாக ரூ.50,000ஐ தொட்ட...