×

கொரோனாவை தடுக்க ஜப்பான் அரசு தீவிரம் : டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 5 மாகாணங்களில் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனம்

டோக்கியோ : ஜப்பானில் 5 மாகாணங்களில் பிரதமர் ஷின்சோ அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு ஜப்பானில் அதிகரித்து வருவதால் ஜப்பான் தலைநகர் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 92 பேர் பலியாகியுள்ளனர். 3906 பேர் பாதிப்படைந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 148 பேருக்கும், நேற்று 83 பேருக்கும் டோக்கியோவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பானில் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் ஷின்ஜோ அபே திட்டமிட்டார்.

இந்நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிரதமர் ஷின்சோ அபே வெளியிட்டார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்று நள்ளிரவு முதல் ஒரு மாத காலத்திற்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட 7 பிராந்தியங்களில் ஆளுநர்கள், மக்கள் வீடுகளில் அடங்கியிருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும், வணிகர்கள் முழு அடைப்பு  செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இது குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் பின்பற்றுகின்ற பாணியிலான  ஊரடங்காக இது இருக்காது. மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் ஊரடங்கு பின்பற்றப்படும். பொதுமக்களும்  ஊரடங்குக்கு ஓத்துழைப்பு அளிக்க வேண்டும், என தெரிவித்துள்ளார் .


Tags : government ,Corona ,Japanese ,State of Emergency , Corona, Japan, Government, Tokyo, Osaka, 5 Provinces, Emergency, Declaration
× RELATED வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு...