×

மக்களை முழுமையாக காப்பாற்ற தமிழகத்தில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை ஓரிரு வாரங்கள் நீட்டிக்கலாம்: டிடிவி தினகரன் அறிக்கை

சென்னை: தமிழகத்தில் ஏப்ரல் 14-க்கு பிறகும் ஊரடங்கை ஓரிரு வாரங்கள் நீட்டிக்கலாம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். ஊரடங்கை நீட்டிக்கும் முன் கொரோனா சிகிச்சை, மக்களின் வாழ்வாதார ஏற்பாடுகளில் சரியான திட்டமிடுதல் அவசியம். மேலும் ஊரடங்கள் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரேனா வைரசால் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 621 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைககளை எடுத்து வருகிறது.

பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கொரோனா பெருந்தொற்று நோய் பாதிப்பில் தமிழ்நாடு இந்திய அளவில் இரண்டாம் இடத்தில் இருப்பது கவலையளிக்கிறது. இதனால் நாம் அனைவரும் அணைந்து முழு வீச்சில் கொரோனாவை எதிர்த்துப் போரிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இதில், அடுத்த இரண்டு வாரங்கள் இன்னும் சவால் நிறைந்ததாக இருக்கும என்று வல்லுநர்கள் எச்சரித்துவருகின்றனர். மக்களை முழுமையாக காப்பாற்ற தேவைப்பட்டால் ஏப்ரல் 14-க்குப் பிறகு மேலும் ஓரிரு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிக்கலாம்.

ஆனால், அப்படி அமல்படுத்துவதற்கு முன்பாக தமிழக அரசு கொரோனா பரிசோதனை மற்றும் சிகிச்சையிலும் மக்களின் வாழ்வாதாரத்திற்கான ஏற்பாடுகளைச் சரியான திட்டமிடுதலோடு செய்வதிலும் உரிய கவனம் செலுத்தவேண்டும். தமிழகத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கிற கொரோனா மரணங்கள் மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. சிக்கிசையில் உடல்நலம் தேறி வந்தவர்கள் உயிரிழந்திருப்பது சரியான நேரத்தில் எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் அவசியத்தையே உணர்த்துகின்றனர். இத்தகைய மரணங்களிலிருந்து பாடம் கற்க வேண்டியது அவசியமாகிறது.

Tags : Tamil Nadu ,TTV Dinakaran , Tamilnadu, Curfew, DTV Dinakaran
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...