×

ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கும் எண்ணம் இல்லை என அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொவைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த கடந்த மாதம் 24ம் தேதி முதல் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. 21 நாட்கள் ஊரடங்கு முடியும்வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் கடைகள் உள்ளன. தினமும் 230 கோடிக்கு டாஸ்மாக் மூலம் வருமானம் இருந்து வந்தது என கூறப்படுகிறது. இந்நிலையில் நாமக்கல் திருச்செங்கோட்டில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது; ஊரடங்கை மீறுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளை திறக்கும் எண்ணம் இல்லை. மாற்று போதையை நாடுவோருக்கு கவுன்சிலின் வழங்க அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-க்கு பிறகு ஊரடங்கு தொடருமா என்பது குறித்து பிரதமரும் முதல்வரும் முடிவு செய்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Thangamani ,task force , Curfew, Task Shop, Minister Thangamani
× RELATED வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற...