×

தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக வறண்ட வானிலை நிலவியது. இந்த நிலையில் நேற்று தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை சார்ந்த சில மாவட்டங்களிலும் ஒரு மணி நேரம் மழை பெய்தது.

தமிழ்நாட்டில் மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் நிலவுவதால் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், மதுரை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மைய அதிகாரி புவியரசன் கூறினார். இந்நிலையில் மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என கூறினார். சென்னையில் சில நேரங்களில் வெப்பத்தின் தாக்கம் குறைவாக இருக்கும் எனவும் கூறினார்.

Tags : districts ,rainfall ,Tamil Nadu: Meteorological Department , Mild , rains , 10 districts,overlapping circulation,Tamil Nadu, Meteorological Department
× RELATED கேரளாவில் கொளுத்தும் வெயிலால் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை