×

மூணாறு அருகே காட்டுத்தீ பரவியதால் 25 ஏக்கர் மரங்கள் நாசம்

மூணாறு: மூணாறு அருகே தீர்த்தமலை பகுதியில் பரவிய காட்டுத்தீயில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் இருந்த அரிய வகை மரங்கள் கருகி சேதமடைந்தன.கேரள மாநிலம், மூணாறு அருகே அமைந்துள்ளது தீர்த்தமலை வனப்பகுதி. இப்பகுதி மறையூர் சந்தன காடுகளுக்கு உட்பட்டது. இந்த வனப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் பயங்கரமாக காட்டுத்தீ பரவியது. தீ மளமளவென அந்த பகுதி முழுவதும் பரவியது. தீயின் கோரத்தாண்டவம் காரணமாக சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள அரியவகை மரங்கள் மற்றும் புல்மேடுகள் தீயில் கருகின.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் தீயை அணைத்தனர். மேலும் ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் தீ பரவியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Tags : Munnar 25 ,Munnar , 25 acres ,trees ,destroyed ,wildfire ,Munnar
× RELATED தொழிலாளர் குடியிருப்புகளை சீரமைக்க...