×

கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் போராடி வரும் ஊழியர்களுக்கு டூடுல் மூலம் நன்றி தெரிவிக்கும் கூகுள்

வாஷிங்டன் : கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் ஊழியர்களை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடூல் சீரிஸை அறிமுகம் செய்துள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 205 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 75,000ஐ நெருங்கியுள்ளது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்ற கட்டுப்பாடு பல நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. எனினும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவல்துறை சேவை புரிந்து வருகின்றன. மறுபக்கம் கொரோனாவிற்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் ஊழியர்களை பெருமைப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் டூடூல் சீரிஸை அறிமுகம் செய்துள்ளது.ஒவ்வொரு நாளும் குறிப்பிட்டத் துறையைச் சார்ந்தவர்களை மேம்படுத்தும் டூடூல்கள் உருவாக்கப்படும் என கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். முதல்தினமான இன்று சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு கூகுள், டூடூல் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளது.


Tags : Google ,war ,Corona , Corona, war, staff, doodle, thank you, Google
× RELATED இரண்டாம் உலகப் போரின்போது சியாம்...