×

மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய திமுக நிர்வாகிகள் மீது வழக்கு

சென்னை:  பொதுமக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய கே.கே.நகர் தனசேகரன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் 10 பேர் மீது கே.கே.நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கடந்த 13 நாட்களாக மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். தினக்கூலி தொழிலாளர்கள் வேலையிழந்தும், வருவாய் இன்றியும் தவித்து வருகின்றனர். இதனால் உணவின்றி தவிர்த்து வரும் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் திமுக சார்பில் மாநிலம் முழுவதும் அரிசி, மளிகை  பொருட்கட்கள், முகக்கசவம், கிருமி நாசனி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், சென்னை கே.கே.நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் பகுதிகளில் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகரன், பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ் உள்ளிட்ட 10 திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நேற்று கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.அப்போது, மக்களுக்கு தொற்று நோய் பரப்பும் வகையில் செயல்பட்டதாக தனசேகரன், துரைராஜ், உமாபதி, செந்தில்குமார், அன்பழகன், அசோக்குமார், சுதாகர், கருப்பசாமி, ரவிக்குமார், பூமிநாதன் ஆகிய 10 பேர் மீது ஐபிசி 188, 269 உட்பட 3 பிரிவுகளின் கீழ் கே.கே.நகர் மற்றும் எம்ஜிஆர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : executives ,DMK ,Case , Case , DMK executives, providing relief,people
× RELATED திமுக இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்