×

ககன்யான் விண்கலம் இந்திய வீரர்களுக்கான பயிற்சி நிறுத்தம்

புதுடெல்லி: இந்தியா வரும் 2022ல் விண்வெளிக்கு ககன்யான் விண்கலத்தில் ஆட்களை அனுப்பி ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து விமானப்படை வீரர்கள் 4 பேர் தேர்வு செய்யப்பட்டு ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் உள்ள யு.ஏ காகரின் விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த பிப்ரவரி முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த மையம் கடந்த வாரம் திடீரென மூடப்பட்டது. இதனால் விண்வெளி வீரர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், `‘ரஷ்யாவில் பயிற்சி பெறும் நமது விண்வெளி வீரர்கள் பத்திரமாக உள்ளனர். தற்போது அவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர் இந்த மாத இறுதியில் பயிற்சி மையம் மீண்டும் திறக்கப்படும். தற்காலிக பயிற்சி நிறுத்தம் காரணமாக ககன்யான் திட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : soldiers ,Indian , Gagayan spacecraft, Indian soldiers, training ground
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை