×

நாகை மாவட்டத்தில் கோரைப்பாய் தொழில் முடக்கம்: 5 ஆயிரம் தொழிலாளர்கள் பாதிப்பு

கொள்ளிடம்:  நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே சிதம்பரத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் உள்ளது. இங்கு கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக பிரம்பால் செய்யப்படும் மேசை, நாற்காலி, கட்டில், ஊஞ்சல் போன்ற பல வகையான பொருட்களும் கலை நயமிக்க அழகு பொருட்களும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  இப்பகுதியில் 250 சில்லரை விற்பனைக் கடைகள் உள்ளன. இக்குடும்பங்கள் இத்தொழிலை நம்பியே பிழைப்பு நடத்தி வருகிறனர். ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி ஆகிய நடவடிக்கைகளால் மூலப்பொருட்களின் விலை உயர்ந்து பிரம்பு மற்றும் கோரைப்பாய் தயார் செய்யும் தொழில் நலிவடைந்த நிலையில் தற்போது இத்தொழிலில் முடக்கம் ஏற்பட்டுள்ளது.  

இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் 5 ஆயிரம் தொழிலாளர்கள் முற்றிலும் வாழ்வதாரத்தை இழந்து வீடுகளில் முடங்கியுள்ளனர். அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்குவது போல பிரம்பு மற்றும் கோரைப்பாய் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கும் நிவாரணநிதி வழங்க வேண்டும். தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன் தொகையில் மூன்று மாத தவணைத்தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.

Tags : district ,Nagai , Nagai district, coronavirus, pineapple industry, workers
× RELATED நாகை மாவட்டம் கீழ்வேளூரில் அருகே தீ...