×

ஜப்பானில் பாதிப்பு அதிகரிப்பால் எமர்ஜென்சியை அமல்படுத்த பிரதமர் பரிந்துரை

டோக்கியோ: கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஜப்பானில் அவசரநிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் பரிந்துரை செய்துள்ளார். ஜப்பானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 85 பேர் பலியாகியுள்ளனர். 3500 பேர் பாதிப்படைந்துள்ளனர். தலைநகர் டோக்கியோவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் 148 பேருக்கும், நேற்று 83 பேருக்கும் டோக்கியோவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜப்பானில் அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த பிரதமர் ஷின்ஜோ அபே திட்டமிட்டுள்ளார். இன்று முதல் எமர்ஜென்சி அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக  அபே நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற நகர்ப்புற பகுதிகளில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. மேலும் தொற்று அதிகரிப்பதை குறைக்க மனிதர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை தவிர்க்க வேண்டும். இதற்காக பொதுமக்கள் மேலும் ஒருமாதம் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் நாட்டில் எமர்ெஜன்சியை அமல்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும் நகரங்களை மூடி சீல்வைக்கவேண்டிய தேவை இல்லை என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டோக்கியோ கவர்னர் யுரியோ கோய்கே ஏற்கனவே தலைநகரத்து மக்கள் ேதவையின்றி வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளார், வார நாட்களில் வீடுகளில் இருந்தே பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாத பிற்பகுதியில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டதை தொடர்ந்து ஒரு சிலரே பாதிக்கப்பட்டனர் என்றார்.



Tags : Japan ,Emergency , Japan, Emergency, Prime Minister, Corona
× RELATED மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...