×

வைரஸ் அறிகுறியால் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் உட்பட 12 தனி அதிகாரிகள் சுய தனிமை

புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்) இயக்குநர் ஜெனரல் ஏ.பி.மகேஸ்வரி மற்றும் 14 தனி அதிகாரிகள், கொரோனா வைரஸ் அறிகுறியால் சுய தனிமைப்படுத்தலுக்கு சென்றுள்ளனர்.  ஏப்.2ம் தேதி வைரஸ் அறிகுறியை பரிசோதித்த சிஆர்பிஎப்பின் தலைமை மருத்துவ அதிகாரியுடன், மேற்கண்ட அதிகாரிகள் தொடர்புக் கொண்டதாகக் கண்டறியப்பட்ட பின்னர், தற்போது அவர்கள் தங்களை சுயமாக தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர். முன்னதாக,  சிஆர்பிஎப்பின் தலைமை மருத்துவ அதிகாரி விடுப்பில் இருந்தபோது, விருந்தினர் மாளிகையில் மகேஸ்வரியை சந்தித்துள்ளார் என்றும், அப்போது அவர் கொரோனா அறிகுறியுடன் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, மகேஸ்வரியை சந்தித்த உள்துறை அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே.விஜய்குமாரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இந்த இரண்டு அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா ஆகியோரை மார்ச் 29ம் தேதி சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடைசியாக வந்த தகவலின்படி மகேஸ்வரி மற்றும் மூத்த பாதுகாப்பு பாதுகாப்பு ஆலோசகரின் ரத்த பரிேசாதனையில் அவர்களுக்கு தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.

Tags : security adviser , National Reserve Police, Corona Virus
× RELATED ரஷ்யா – உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு...