×

அனைவரும் இணைந்து போரிடவேண்டும்: ராகுல் அழைப்பு

புதுடெல்லி: `‘கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியர்கள் ஒருங்கிணைந்து போராடி வெற்றி பெற வேண்டும்’’ என்று காங். முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.  காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று கொரோனா வைரசை எதிர்த்து போராட பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையாக செயல்பட வலியுறுத்தி வெவ்வேறு மதத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் கைகோர்த்தபடி செல்வது போன்ற புகைப்படத்தை இணைத்து அவர் டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘இந்திய மக்கள் ஒருங்கிணைந்து ஒரே மக்களாக செயல்படும் வாய்ப்பை கொரோனா வைரஸ் வழங்கியுள்ளது. எனவே சாதி, மதம், இன வேறுபாட்டை மறந்து இந்த உயிர்க்கொல்லி வைரசை தோற்கடிக்க இணைந்து பணியாற்ற வேண்டும்.

இதற்காக நாம் இரக்கம், சுய தியாகம் ஆகியவற்றை மையப்படுத்தி செயல்படவேண்டும்’’ என்று கூறியுள்ளார். இதேபோல், காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ``கொரோனாவை தடுப்பதற்கான ஒரே வழி அதிகளவிலான பரிசோதனைகள் மேற்கொள்வது மட்டுமே. அதன் பிறகே பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். `அதிகளவிலான பரிசோதனைகள், பின்னர் சிகிச்சை’ என்பதே உங்களது தாரக மந்திரமாக இருக்க வேண்டும். எனவே அனைவரும் அதிகளவிலான சோதனை செய்ய குரல் கொடுக்க வேண்டும்’’ என்று கூறியிருப்பதுடன் `டெஸ்ட்மோர்சேவ்இந்தியா’ என்ற ஹேஷ்டேக்கை இணைத்துள்ளார்.


Tags : Rahul , Corona, Rahul Gandhi
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்