×

ஜெயங்கொண்டம் கல்லாத்தூர் கிராமத்தில் அசத்தல்; அனுமதி சீட்டு இருந்தாதான் அத்தியாவசிய பொருட்கள்.... குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே பாஸ்

ஜெயங்கொண்டம்: கல்லாத்தூர் கிராமத்தில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வர ஒருவர் மட்டுமே சென்றுவர ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சேர்ந்து செல்வதற்கு தடைவதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தில் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வீட்டை விட்டு வெளியேறி கடைவீதி சென்று பொருட்கள் வாங்கி வர அனுமதி சீட்டு வழங்கப்பட்டு வருகிறது. அந்த சீட்டில் 15 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு மட்டும் சென்று வர முடியும். இந்த அனுமதி சீட்டுடன் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க செல்பவரின் ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன் எடுத்துச் செல்ல வேண்டும். பொருட்கள் வாங்கும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்,

அனுமதி சீட்டில் குறிப்பிட்ட நாளில் காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் அந்த அடையாளச் சீட்டு உபயோகப்படுத்தும் அளவிற்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனுமதிச் சீட்டினை ஜெயங்கொண்டம் அருகே கல்லாததூர் கிராமத்தில் பொதுமக்களிடம் வார்டு உறுப்பினர் பார்வதி முகக் கவசத்துடன் வழங்கினார்.

Tags : village ,Jayankondam Kallathoor ,Jayankondam , Jayankondam, Passport, Essential Items
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...