×

அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்ட நாடுகள் அரண்டு போயுள்ள நிலையில், கொரோனா வைரஸின் நிழல் கூட படியாத 18 நாடுகள்

வாஷிங்டன் :  உலக அளவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆயிரத்தை  தாண்டியுள்ளது. சீனாவின் வூகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா தொற்று, தற்சமயம் உலகளவில் சுமார் 190 நாடுகளை ஆட்டிப்படைத்து வருகிறது. அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. உலகளவில் பலி எண்ணிக்கை 70,172 உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12,82,041 ஆகவும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,69,451 ஆகவும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 2ம் தேதி வரை, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தகவலை ஆராய்ந்தால் 18 நாடுகளில் கொரோனா தொற்று ஏற்படவில்லை.காம்ரோஸ், க்ரிபாட்டி, லெசோட்டோ, மார்ஷல் தீவுகள், மைக்ரோனீசியா, நவ்ரூ, வட கொரியா, பாலவ், சமெளவா, செளவ் டேம் மற்றும் பிரின்ஷிபி, சாலமன் தீவுகள், தென் சூடான், டஜிகிஸ்தான், டாங்கா, டர்க்மெனிஸ்டான், டுவாலு, ஏமன் மற்றும் வான்வாட்டு ஆகியவைதான் அந்த 18 நாடுகள்.

சில நாடுகளில் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தாலும், அவை வெளியே தெரியாமல் இருக்கலாம். எடுத்துக்காட்டாக வட கொரியாவை சொல்லலாம். என நிபுணர்கள் ஒப்புக் கொள்கின்றனர். போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமனிலும் யாருக்கும் தொற்று இல்லை என்று கூறப்படுகிறது.சில நாடுகளில் இன்னும் கொரோனா தொற்று கால் பதிக்கவில்லை என்று கூறலாம். அதில் சில நாடுகள் மிகக் குறைவான வருகையாளர்களே கொண்ட சிறிய தீவுகள். உலகில் மிகக் குறைவான வருகையாளர்களைக் கொண்ட 10 இடங்களில் ஏழு இடங்களில் கொரோனா தொற்று இல்லை. 


Tags : countries ,Italy ,United States , China, Corona. Virus. Spain, USA, Italy
× RELATED எந்த நேரத்திலும் தாக்குதல்… இஸ்ரேல்,...