×

1 லட்சம் கொரோனா தொற்றுள்ள 4வது நாடானது ஜெர்மனி: பலி எண்ணிக்கை 1,600ஐ நெருங்குவதால் ஈஸ்டர் கொண்டாட்டம் வேண்டாம் என பிரதமர் அறிவிப்பு


 ஜெர்மனி : அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி நாடுகளைத் தொடர்ந்து ஜெர்மனியும் 1 லட்சம் கொரோனா தொற்றுள்ள நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது. 4,050 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டதையடுத்து ஜெர்மனியில் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 1,00,125 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கையும்1,600ஐ நெருங்கிவிட்டது.இதையடுத்து கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மேர்க்கெல் அறிவுறுத்தியுள்ளார்.

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. கண்காணிப்பில் இருந்த 550 பேர் பலியாகி இருப்பதால் மொத்தம் உயிரிழப்பு 16,000 ஆக அதிகரித்துவிட்டது. ஸ்பெயினிலும் ஒரே நாளில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு 1,32,000 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் வைரஸ் பரவலை தடுக்க முடியாததால் ஸ்பெயின், இத்தாலி அரசு செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றன.


Tags : Germany ,world ,celebration ,Easter , Corona, Infection, Germany, Kills, Easter, Celebration, Prime, Announcement
× RELATED அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட...