×

அந்தியூர் பகுதியில் சாராயம் காய்ச்ச வெள்வேல் மரம் வெட்டி கடத்தல்

ஈரோடு:   கொரோனா  வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ள  நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய அந்தியூர் பகுதியில் வெள்வேல் மரத்தை வெட்டி கடந்தி வருகின்றனர்.   கொரோனா வைரஸ் தடுக்க பொதுமக்கள் தங்களை  தனிமைப்படுத்திக் கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள 203 டாஸ்மாக் கடைகளும்  மூடப்பட்டுள்ளது. இதனால் மது கிடைக்கமால் குடிமகன்கள் திண்டாடி  வருகின்றனர். இந்நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்ச  துவங்கியுள்ளனர். இதில் அந்தியூர் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்ச  பயன்படும் மூலப் பொருளான வெள்வேல்  மரத்தில் உள்ள பட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே இரவு நேரங்களில்  வெள்வேல் மரங்களை  வெட்டி கடத்தி வந்து சாராய ஊறல் போட்டு விற்பனையை தொடங்கியுள்ளனர்.  அந்தியூரில் பல பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சுவது அதிகரித்துள்ளது.

 இது குறித்து சமூக  ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘தற்போது  கள்ளச்சாராய ஊறல்கள் அதிக அளவில் அந்தியூர் பகுதியில் தயாரிக்கப்படுகிறது.  இதில் சாராயம் காய்ச்ச முக்கிய மூலப் பொருளாக வெள்வேல் மரப்பட்டை, நாட்டு  சர்க்கரை, பழங்கள் ஆகியவற்றை போட்டு  ஊறல் தயாரிக்கின்றனர். வெள்வேல் மரப்பட்டை துவர்ப்பு குறைவானதாகவும்,  கொதிக்கும் திறன் அதிகமாக உள்ளது. ஆல்கஹால் உற்பத்திக்கு துணை பொருளாக  இந்த வெள்வேல் மரப்பட்டை உள்ளதால் இதை பயன்படுத்தி சாராயம்  தயாரிக்கின்றனர். அந்தியூர், வெள்ளித்திருப்பூர் ஆகிய பகுதிகளில் வெள்வேல்  மரங்கள்  அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் மரப்பட்டையை உறித்தால் தகவல் கசிந்து  விடும் என்பதால் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக அந்த மரத்தை வெட்டி கடத்தி  வருகின்றனர். தற்போது அந்தியூர், அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஊறல்கள்  போடப்பட்டு சாராயம் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை  நடவடிக்கை எடுக்க  வேண்டும். இல்லையென்றால் கள்ளச்சாராயம் ஈரோடு மாவட்டத்தில் களைகட்ட  தொடங்கிவிடும்,’’ என்றனர்.



Tags : area ,Anthiyur ,Brewery Timber ,Andheyur , Andheyur , Brewery, Timber cutting
× RELATED சட்டவிரோத மது விற்பனை; 8 பேர் கைது