×

தடையை மீறியவர்களுக்கு உடற்பயிற்சி தண்டனை: ஓசூர் போலீசார் அதிரடி

ஓசூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு வருகிற 14ம் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் அனைத்து கடைகள் அடைக்கப்பட்டும், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்களில் சிலர் தடை உத்தரவை மதிக்காமல் டூவீலர்களில் சுற்றி வருவது அதிகரித்து வருகிறது. மேலும் தேவையின்றி வெளியில் நடமாடுபவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர்.

இந்நிலையில், ஓசூரில் நேற்று 144 தடை உத்தரவை மீறி டூவீலரில் வந்தவர்களுக்கு போலீசார் நூதனமான முறையில் தண்டனை வழங்கினர். அதில் பல்வேறு வித உடற்பயிற்சி செய்யுமாறு போலீசார் கூறினர். இதை தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பொதுமக்கள் உட்கார்ந்து எழுந்து நிற்பது, தண்டால் உள்ளிட்ட உடற்பயிற்சி செய்தனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர். போலீசார் கூறுகையில், பொதுமக்களின் நலன் கருதி தேவையின்றி வெளியே சுற்றுபவர்களுக்கு நூதன முறையில் தண்டனை வழங்கப்படும். எனவே, வருகிற 14ம் தேதி வரை பொதுமக்கள் ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றனர்.


Tags : Hosur Police Action , violate ,ban, Exercise, Punishment,: Hosur Police ,Action
× RELATED ஊரடங்கை மீறியவர்கள் மீது நடவடிக்கை...