×

40 பேரை PM-CARES நிதிக்கு தலா 100 ரூபாய் செலுத்த அறிவுறுத்துக, ஒருவேளை உணவை மக்களுக்கு வழங்குக : பாஜக நிர்வாகிகளுக்கு மோடி வேண்டுகோள்

டெல்லி: ஊரடங்கால் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அனைத்து பாஜக நிர்வாகிகளும் ஒருவேளை உணவை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடி ட்விட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். பாஜகவின் 40-வது ஆண்டு நிறைவு தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்துள்ளார். அதில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல்களை, பாஜக நிர்வாகிகள் பின்பற்றுமாறு பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கொரோனா வைரஸ் உடன் இந்தியா போராடும் இந்த தருணத்தின் போது, நமது பாஜக கட்சியின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறோம். இந்நாளில் பாஜக கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல்களை பாஜக நிர்வாகிகள் பின்பற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுங்கள். சமூக விலகளையும் கடைபிடியுங்கள். இந்தியாவை கொரோனா இல்லாத நாடாக மாற்றுவோம். பாஜகவுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், நல்லாட்சி மற்றும் ஏழைகளுன் வாழ்வாதாரத்தை மேம்படுத்திவதில் கட்சி கவனம் செலுத்தியுள்ளது. பல சாகப்தங்களாக கட்சியைக் கட்டியெழுப்ப கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி, இவர்களால் தான்  நம் நாட்டின் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சேவை செய்ய பாஜகவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது, எனத் தெரிவித்துள்ளார்.

ஜே.பி.நட்டாவின் வழிகாட்டுதல் பின்வருமாறு..

*அனைத்து பாஜக அலுவலகங்களிலும் , ஒவ்வொரு பாஜக நிர்வாகிகளின் வீடுகளிலும் புதிய கட்சி கொடிகளை ஏற்றி வையுங்கள். கொடி ஏற்றும்போது, சமூக விலகலை கடைபிடியுங்கள்.

*டாக்டர் ஷியாம பிரசாத் முகர்ஜி மற்றும் தீன் தயாள் உபாதயா ஆகியோரின் திருவுருவ புகைப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துங்கள்.

*ஊரடங்கால் மக்களின் கஷ்டங்களை உணர்ந்து அனைத்து பாஜக நிர்வாகிகளும் ஒருவேளை உணவை மக்களுக்கு வழங்க வேண்டும்.

*ஏழைகளுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ் சுமார் 5 நபர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்குங்கள்.

*அடுத்த ஒரு வாரத்தில், நமது சாவடியில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் வீட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு முகக்கவசங்களை வழங்குங்கள்.

*வீட்டிலேயே முகக்கவசங்களை தயாரித்தல் முறை மற்றும் விநியோகிப்பது தொடர்பான வீடியோக்களை #WearFaceCoverStaySafe என்ற ஹாஸ்டாக்கில் பகிரச் செய்யுங்கள்.

*ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் சுமார் 40 பேரை PM-CARES நிதிக்கு தலா 100 ரூபாய் நிதியுதவி அளிக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

*ஒவ்வொரு சாவடியிலும் உள்ள 40 வீடுகளுக்கு பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று, அவசரகால ஊழியர்களுக்கு அளிக்கப்படும் நன்றி கடிதங்களில் கையெழுத்துகளை வாங்க வேண்டும். கொரோனா ஊரடங்கின் போதும் அயராது சேவை புரிந்து வரும் காவல்துறை, மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், வங்கி மற்றும் தபால் துறை ஊழியர்கள், துப்பரவு பணியாளர்கள் ஆகியோருக்கு கையெழுத்திடப்பட்ட நன்றி கடிதங்களை நேரில் சென்று வழங்க வேண்டும்.

*பாஜக கட்சி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் பற்றிய புத்தகங்களை படிக்க வேண்டும்.


Tags : executives ,Rs ,BJP ,Modi , BJP, Executives, Modi, Request, Prime Minister, JP Natta
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது