×

கும்மிடிப்பூண்டி அருகே கொரோனா தொற்று பாதித்த இடங்களில் மருத்துவ கண்காணிப்பு

கும்மிடிப்பூண்டி. : டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு   ஆரம்பாக்கம், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி, கவரப்பேட்டையை சேர்ந்த 3 பேர் சென்று வந்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்ய மருத்துவக் குழுவினர் 5 தினங்களுக்கு முன்பு அழைத்துச் சென்றனர். அவர்களின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து, நேற்று முன்தினம் மாலை 3 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து வட்டார சுகாதாரத்துறை அலுவலர் கோவிந்தராஜ், 25  மருத்துவக் குழுக்கள் வீடு வீடாகச்சென்று யாருக்காவது காய்ச்சல், இருமல், சளி இருக்கிறதா என பரிசோதித்து வருகின்றனர்.

அத்தோடு கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் நமச்சிவாயம், ஒன்றிய கவுன்சிலர் இந்திரா திருமலை ஆகியோர் தலைமையில் சாலையோர கடை, வீடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக துப்புரவு மேற்பார்வையாளர் கோபி தலைமையில் வீடு வீடாகச்சென்று கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அனைத்து இடங்களிலும் கிருமிநாசினி தொடர்ந்து தெளிக்கப்படுகிறது.

Tags : coronavirus sites ,Gummidipoondi , Medical surveillance, coronavirus sites , Gummidipoondi
× RELATED சிப்காட்டிற்கு இடம் ஒதுக்கியதை...