×

ஆயுர்வேத பொருட்களால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்: சுகாதார நிபுணர்கள் பரிந்துரை

புதுடெல்லி: கொரோனாவுக்கான நிவாரணத்தை கண்டுபிடிக்க உலகமே போராடிக் கொண்டிருக்கையில், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வைரஸ் பாதிப்பை குறைக்கவும், நோய் பாதிப்பிலிருந்து மீளவும் ஆயுர்வேத பொருட்கள் உதவுகிறது என சுகாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். உலகில் வேகமாக பரவும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் போராடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க, நமது உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது ஒன்று மட்டுமே தற்போதைய தீர்வு. பிரதமர் மோடி சமீபத்தில் ஆயுர்வேதாவின் பயன்கள் குறித்து கூறினார். இது தொடர்பாக ஆயுஷ் அமைச்சகம் வெளியிடும் ஆலோசனைகளை பின்பற்றி நல்ல ஆரோக்கியத்துடனும், உடல் தகுதியுடனும் இருக்கும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெந்நீர் குடிக்கவும், யோகா, பிரணாயம், தியானம் ஆகியவற்றை ஒவ்வொரு நாளும் 30 நிமிடங்கள் செய்யவும் ஆயுஷ் அமைச்சகம் ஆலோசனை வழங்கியது. மேலும், சமையலில் மஞ்சள், சீரகம், மல்லி, பூண்டு ஆகியவற்றை அதிகம் சேர்க்கவும், காலையில் 10 கிராம் சவன்பிராஸ் சாப்பிடவும் ஆலோசனை கூறியது. கொரோனாவை எதிர்த்து போராட வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவையும் உதவும் என கூறப்பட்டது. ஒரு கிளாஸ் பாலில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து ஒரு நாளைக்கு இருவளை குடிப்பது, மூக்கில் காலையும், மாலையும் ஒரு சொட்டு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் அல்லது நெய் விடுவதும் சிறந்தது என ஆயுஷ் அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.

பிரதமரின் ஆலோசனை குறித்து ஏஐஎம்ஐஎல் பார்மா நிர்வாக இயக்குனர் சஞ்சித் சர்மா கூறுகையில், ‘‘வைரசில் இருந்து நம்மை பாதுகாக்க எதிர்ப்பு சக்தி ஒன்றுதான் நமது பாதுகாவலர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் அதில் இருந்து மீள, எதிர்ப்பு சக்தி உதவும் என கூறியுள்ளார். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க எங்கள் நிறுவனம் ‘பிபாத்ரல்’ என்ற ஆயுர்வேத மருந்தை விற்பனை செய்கிறது. இதில் மிருத்துன்ஜெய் ரசா, சஞ்சீவ்வானி, வாதி, துளசி மற்றும் ஜிலோ ஆகிய மூலிகைகள் உள்ளன,’’ என்றார்.

இந்த மூலிகைகள் உடலில் புரதம் மற்றும் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துகிறது’ என அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) முன்னாள் விஞ்ஞானி ஏ.கே.எஸ். ராவத் கூறியுள்ளார். ‘எதிரியை எதிர்த்து போராட ஆயுதம் இல்லாத நிலையில், வலுவான கவசம் மட்டுமே உங்களை பாதுகாக்க சிறந்தது,’ என்கிறார் இவர்.


Tags : Health Experts , Ayurvedic products, anti power, health professionals
× RELATED கொரோனா வைரஸ் பரவியது எப்படி? வுகானில்...