×

சமூக வலைதளங்களில் திட்டமிட்டு வெறுப்பு பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு இஸ்லாமிய கூட்டமைப்புகள் கோரிக்கை

சென்னை: சமூக வலைதளங்களில் திட்டமிட்டு வெறுப்பு பிரசாரங்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு இஸ்லாமிய கூட்டமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.  தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், எஸ்டிபிஐ, தப்லீக் ஜமாஅத் ஆகிய அமைப்புகளின் சார்பில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:nதமிழகத்தில் அனைத்து பள்ளிவாசல்களிலும் எவ்வித தொழுகையும் நடைபெறுவதில்லை. இதே நிலை முழுமையான முடக்கம் நீக்கப்படும் வரை தொடர வேண்டுமென்று அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகளையும், மக்களையும் கேட்டு கொள்கிறோம்.

கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படும் நிலையில் உள்ளவர்கள் தாங்கள் சந்திக்கும் இடர்பாடுகள் குறித்து சமூக ஊடகங்களில் பரப்பாமல் 7373736085 என்ற கொரோனா அவசர உதவி மையத்தின் எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். சில மருத்துவமனைகளில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்று புகார் வந்துள்ளது.  இதை போர்க்கால அடிப்படையில் நீக்கதமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சமூக வலைதளங்களில் பரப்பப்படும் திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரங்கள் மீது புகாரின் அடிப்படையில் சிலர் மீது தமிழக அரசு  எடுத்து வரும் நடவடிக்கைளுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெறுப்பு பரப்புரை செய்வோர் மீது மேலும் தீவிரமாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : state ,associations ,hate campaigns , Corona, Social Networks, Tamilnadu Government, Islamic Federations
× RELATED மதுரையில் வணிகர்கள் சங்கங்களின்...