×

முடக்கத்துக்குப்பின் பயணிகள் பாதுகாப்பு குறித்து ரயில்வே தீவிர ஆலோசனை

புதுடெல்லி: முடக்கத்துக்குப்பின் ரயில்களை இயக்கும்போது, பயணிகளின் பாதுகாப்பு எவ்விதமான நடைமுறைகளை பின்பற்றலாம் என ரயில்வே வாரியம் தீவிரமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
* மத்திய அரசின் அனுமதிக்குப்பின், ஒவ்வொரு கட்டமாக ரயில்கள் இயக்கப்படும். அதுபற்றி இந்த வாரத்தில் முடிவு எடுக்கப்படும்.
* இது மிகவும் முக்கியமான நேரம். இதனால் பயணிகள் பாதுகாப்பில் கவனம் செலுத்துவோம். கொரோனா பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்காக தீவிர ஆலோசனை நடக்கிறது.
* முதலில் நாட்டில் பல பகுதிகளில் முடங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் செல்வதற்கான வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படலாம்.
* ரயில் பெட்டிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : consultation ,railway , Railway, Corona
× RELATED மதுரை ரயில் நிலையம் வெளியே தாயுடன்...